ஆன்மிகம்
ஆனி மாத பூரத்தையொட்டி சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

ஆனி மாத பூரம் விழா: சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்

Published On 2021-07-15 03:46 GMT   |   Update On 2021-07-15 03:46 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆனி மாத பூரத்தையொட்டி சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 5-ம் தேதியில் இருந்து கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாதம்தோறும் வரும் பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக தற்போது எளிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆனி மாத பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News