ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண வந்த பக்தர்கள் ஏமாற்றம்

Published On 2021-07-14 04:43 GMT   |   Update On 2021-07-14 04:43 GMT
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரத்தொடங்கி உள்ளனர். கன்னியாகுமரி கடலில் நேற்று வழக்கத்தை விட அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது.
கொரோனா ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்ததை தொடர்ந்து பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரத்தொடங்கி உள்ளனர்.

அதன்படி நேற்றும் அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் திரண்டு இருந்தனர். ஆனால், வானில் மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டதால் சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை. மேலும் சாரல் மழை பெய்தது.

இதனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், பக்தர்கள் பகவதி அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். மேலும், கன்னியாகுமரி கடலில் நேற்று வழக்கத்தை விட அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது.
Tags:    

Similar News