ஆன்மிகம்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2021-07-05 08:44 IST   |   Update On 2021-07-05 08:44:00 IST
கெலமங்கலம் மல்லேஸ்வர சாமி கோவில் திருவிழாவில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி சித்த லிங்கேஸ்வரசுவாமி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.
கெலமங்கலம் அருகே உள்ள ஜெ.காருப்பள்ளி ஊராட்சி வெங்கட்டாபுரம் கிராமத்தில் 9 ஆண்டுகளுக்கு ஒருமுறை மல்லேஸ்வர சாமி கோவில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மல்லேஸ்வர சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்களின் தலையில் கோவில் பூசாரி சித்த லிங்கேஸ்வரசுவாமி தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News