ஆன்மிகம்
வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

4 மாவட்டங்களில் பொதுமக்கள் தரிசனத்திற்காக வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன

Published On 2021-06-28 02:51 GMT   |   Update On 2021-06-28 17:15 GMT
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை :

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று அதிகாலை  கோவில்களில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்வெப்பம் பரிசோதிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்
கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

* காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை  கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவிலில் இருக்கும் சிலைகளை பக்தர்கள் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

* விபூதி, குங்குமம் மற்றும் இதர பிரசாதங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

* அர்ச்சனைக்காக பூ, பழம், தேங்காய் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

Tags:    

Similar News