ஆன்மிகம்
சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை

சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-06-11 11:03 IST   |   Update On 2021-06-11 11:03:00 IST
நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, சிறப்பு யாகம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் அமைந்துள்ள நவகிரக கோட்டை சிவன் கோவிலில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு, உலகில் கொரோனா நோய்த்தொற்று ஒழியவும், மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு யாகம் நடைபெற்றது.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரர் யாகத்தை நடத்தி வைத்து சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகளை செய்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Similar News