ஆன்மிகம்
ஜெகநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி

ஜெகநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி

Published On 2021-06-05 05:09 GMT   |   Update On 2021-06-05 05:09 GMT
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக 100 கிலோ மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.
கும்பகோணம் அருகே நாதன்கோவில் ஜெகநாத பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் நிறைவாக 100 கிலோ மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது.விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிறப்பு மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் பிரகார புறப்பாடு நடந்தது.

கடந்த 3-ந் தேதி இரவு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதில் சிறப்பு யாகமும், புஷ்பாஞ்சலியும் நடந்தது. உற்சவர் பெருமாள் உபய நாச்சியார் மற்றும் செண்பகவல்லி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.

அப்போது சம்பங்கி, ரோஜா, அரளி போன்ற பலவகை நறுமண மலர்களால் சாமிக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. விழா ஏற்பாடுகளை ஜெகநாத பெருமாள் கைங்கர்ய சபையினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News