ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பரிகார பூஜை

Published On 2021-06-03 12:15 IST   |   Update On 2021-06-03 12:17:00 IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜை, கோமாதா பூஜை நடத்தினர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாலை 5 மணியளவில் கோவில் தந்திரி சங்கர நாராயணன் மற்றும் குருக்கள் பரிகார பூஜை, கோமாதா பூஜை நடத்தினர்.

பின்னர் புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி, வாஸ்து பலி, அஸ்தர பூஜை போன்றவை நடத்தி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாழ பூஜைகள் நடந்தது. இந்த பூஜைகளில் கோவில் நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News