ஆன்மிகம்
திருமலையில் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் நடந்த போது எடுத்த படம்

திருமலையில் சுந்தரகாண்ட பாராயண மகா யாகம் 16 மணி நேரம் நடந்தது

Published On 2021-06-02 11:43 IST   |   Update On 2021-06-02 11:43:00 IST
திருப்பதியில் சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்தப்பட்டது. 40 வேத பண்டிதர்களை, ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகத்தை நடத்தினர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கவும், உலக நன்மைக்காகவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் 16 மணி நேரம் தொடர்ந்து சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்த முடிவுசெய்யப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று முன்தினம் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகம் நடத்தப்பட்டது. 40 வேத பண்டிதர்களை, ஒரு குழுவுக்கு 10 பேர் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட்டு அவர்கள் இந்த சுந்தரகாண்ட பாராயண மகாயாகத்தை நடத்தினர்.


திருப்பதியில் உள்ள தர்மகிரி எஸ்.வி.வேதவிஜன பீடத்தில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் நடந்த இந்த யாகத்தில் சுந்தரகாண்டத்தின் 2,821 வசனங்களை தொடர்ந்து 16 மணி நேரம் ஓதினர். காலை 6 மணிக்கு தொடங்கிய யாகம் தொடர்ந்து இரவு 10 மணி வரை எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 16 மணி நேரம் நடந்தது.

உலக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த யாகத்தின்போது ஸ்ரீவாரி கல்யாணம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவையை தவிர மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

Similar News