ஆன்மிகம்
கோவிலில் குவிந்த பக்தர்களின் கூட்டம்

உத்தரபிரதேச அனுமன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2021-06-02 04:01 GMT   |   Update On 2021-06-02 04:01 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பல நாட்களாக நீடித்த ஊரடங்கில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த  தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராவணனை வீழ்த்தி விட்டு அயோத்தி திரும்பும் ராமபிரான் அந்த இடத்தை அனுமனுக்கு கொடுத்தார். அதனால் அந்த இடம் அனுமன் கார்ஹி என அழைக்கப்படுகிறது.

இந்த அனுமன் கோவிலில் நேற்று நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அனுமனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News