ஆன்மிகம்
மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து வழிபட காரணம்

மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து வழிபட காரணம்

Published On 2021-06-01 14:15 IST   |   Update On 2021-06-01 14:15:00 IST
‘தா வரம்’ என்று மனிதன் கேட்டதற்கு, இறைவன் தாவரத்தை வழங்கி உடல்நலத்தை சீராக்கிக் கொள்ள வாய்ப்பளித்தார். ஆதிகாலத்தில் வாழ்ந்த முனிவர்கள் மரப்பொந்துகளில் தவம் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.
மனிதன் வளமுடன் வாழ இறைவன் தந்த வரங்கள் தான் மரங்களும், தாவரங்களும். ‘தா வரம்’ என்று மனிதன் கேட்டதற்கு, இறைவன் தாவரத்தை வழங்கி உடல்நலத்தை சீராக்கிக் கொள்ள வாய்ப்பளித்தார். ஆதிகாலத்தில் வாழ்ந்த முனிவர்கள் மரப்பொந்துகளில் தவம் இருந்ததாக வரலாறுகள் சொல்கின்றன.

மரத்தின் விதை, வேர், பூ, காய், இலை, பட்டை போன்ற அனைத்தும் மனித உயிர்களைக் காக்கும் சக்தியாக இருப்பதால் மரங்களின் அடியில் தெய்வங்களை வைத்து மனிதர்கள் வழிபடத் தொடங்கினார்கள். அரச மரத்தடியில் விநாயகரையும், வேப்ப மரத்தடியில் அம்பிகையையும் வைத்து மரத்தின் தன்மையை மக்களுக்கு உணரவைத்தனர்.

ஆலும், வேலும் பல்லுக்குறுதி, நாலும், இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்லி வைத்தனர். பிராண வாயுவை வெளியிடும் மரங்களை வளர்ப்பதில் நாம் முனைப்புக் காட்டுவது நல்லது. முடிந்தவரை இல்லங்களில் மரங்களை வளர்ப்போம், மகத்துவம் காண்போம்.

Similar News