ஆன்மிகம்
கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஸ்நாபன திருமஞ்சனம்

கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஸ்நாபன திருமஞ்சனம்

Published On 2021-05-31 14:12 IST   |   Update On 2021-05-31 14:12:00 IST
திருப்பதியில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருமலையில் ஏழுமலையான் தனியாகவும், அலுமேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் தனியாகவும் அருள்பாலிக்கின்றனர். சீனிவாசமங்காபுரத்தில் ஏழுமலையான் பத்மாவதி தாயாருடன் கல்யாண வெங்கடேச பெருமாளாக அருள்பாலிக்கிறார். திருமண வரம் வேண்டுபவர்கள் இந்த பெருமாளை வணங்கி திருக்கல்யாணத்தை தரிசித்தால் கல்யாணம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவேதான் நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில்  வருடாந்திர வசந்த உற்சவம் கோவில் உள்விழாவாக நடந்து வருகிறது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில்  வசந்தோற்சவத்தின் 2-ம் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

Similar News