ஆன்மிகம்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில்

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் நாயன்மார்கள் குருபூஜை விழா

Published On 2021-05-31 11:54 IST   |   Update On 2021-05-31 11:54:00 IST
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய 4 நாயன்மார்கள் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மிக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் திருஞானசம்பந்தர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஆகிய 4 நாயன்மார்கள் குருபூஜை வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெற்றது. நான்கு நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவையின் நிறுவனர் வக்கீல் ராம.சேயோன் மற்றும் அதன் நிர்வாகிகள் செய்திருந்தார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Similar News