ஆன்மிகம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில்

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2021-05-31 09:32 IST   |   Update On 2021-05-31 09:32:00 IST
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து ஜுரஹரேஸ்வரருக்கு பால், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைய வேண்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அதனை தொடர்ந்து ஜுரஹரேஸ்வரருக்கு பால், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பி்ன்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News