ஆன்மிகம்
அழகர்கோவில் கள்ளழகர்கோவில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி கிடந்ததை படத்தில் காணலாம்.

ஊரடங்கு காரணமாக வெறிச்சோடிய அழகர்கோவில்

Published On 2021-05-29 13:24 IST   |   Update On 2021-05-29 13:24:00 IST
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் உள்ளேயே பக்தர்கள் அனுமதியின்றி திருவிழாவை நடத்தலாம் என்று அரசு அறிவித்ததன் காரணமாக உள் பிராகரத்திலேயே நடைபெற்று வருகிறது.

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ விழா இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது. தொடர்ந்து 10-வது நாள் திருவிழாவும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்நிலையில் அழகர்கோவில் கள்ளழகர்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் ஊரடங்கு காரணமாக நேற்று பக்தர்கள் யாருமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

Similar News