ஆன்மிகம்
சிங்கப்பெருமாள் நரசிம்மர்

சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருக்கும் நரசிம்மர்

Published On 2021-05-28 12:40 IST   |   Update On 2021-05-28 12:40:00 IST
இந்த ஆலயத்தில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தியின் உருவம் மிகப்பெரியதாகும்.
ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இங்குள்ள நரசிம்ம மூர்த்தி, ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘பாடலம்’ என்றால் ‘சிவப்பு’, ‘அத்ரி’ என்றால் ‘மலை’ என்று பொருள்.

சிவந்த கண்களுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இங்குள்ள நரசிம்மருக்கு இப்பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடது காலை மடித்து வைத்தும், வலது காலை தொங்கவிட்டபடியும் காட்சி தருவார்.

ஆனால் இந்த ஆலயத்தில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்ட நிலையிலும் அருள்பாலிக்கிறார். இந்த நரசிம்ம மூர்த்தியின் உருவம் மிகப்பெரியதாகும்.

காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம்-செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

Similar News