ஆன்மிகம்
குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வீதி உலா

Published On 2021-05-26 13:48 IST   |   Update On 2021-05-26 13:48:00 IST
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 8-ம் நாளில் குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
திருப்பதியில் கோவிந்தராஜசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-ம் நாளில் கோவிந்தராஜசாமி சூரிய பிரபை வாகனத்தில் காட்சி தந்தார். கொரோனா காரணமாக விழா தனிமையில் நடந்தது

பின்னர் கோவிந்தராஜசாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் பால், தயிர், தேன், இழநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளினார்.

 8-ம் நாளான நேற்று இரவு குதிரை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Similar News