ஆன்மிகம்
மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகம் பக்தர்கள் இன்றி நடந்தது

Published On 2021-05-26 03:51 GMT   |   Update On 2021-05-26 03:51 GMT
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாககம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது.

கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் மருதமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா? என்று பக்தர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது

இந்த நிலையில் வைகாசி விசாகமான நேற்று அதிகாலை 5 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சி அளித்தார். மகாதீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை. விழா மிக எளிமையாக நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.இதேபோல மலைப்பாதையில் உள்ள இடும்பன் கோவிலில் இடும்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த இடும்பன் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News