ஆன்மிகம்
சயன கோலத்தில் காட்சி தரும் ராமன்

சயன கோலத்தில் காட்சி தரும் ராமன்

Published On 2021-05-07 08:03 GMT   |   Update On 2021-05-07 08:03 GMT
திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் கோவிலில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உள்ளது, திருப்புல்லாணி திருத்தலம். இங்கு ஆதிஜெகந்நாத பெருமாள் கோவில் இருக்கிறது.

ராவணனால் கடத்தப்பட்ட சீதை, இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்தாள். அவளை மீட்க வேண்டிய கட்டாயம் ராமனுக்கு ஏற்பட்டது. இலங்கை செல்ல வேண்டும் என்றால், கடலைக் கடந்துதான் போக முடியும். எனவே கடலில் பாலம் அமைக்க, சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார்.

அப்போது, தர்ப்பைப் புல்லின் மீது சயனம் (படுத்து) கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால், இந்த ஆலயத்தில் சீதை இல்லை.

லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணனும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், பாலம் அமைக்க ஆலோசனை செய்த நிலையில் சூரியன், சந்திரன் மற்றும் தேவர்கள் காட்சி தருகின்றனர்.
Tags:    

Similar News