ஆன்மிகம்
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு

Published On 2021-04-29 01:53 GMT   |   Update On 2021-04-29 01:53 GMT
திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து ஒரு வாரம் சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சூரிய ஒளி நேரடியாக சிவலிங்கம் மீது விழுந்தது. தொடர்ந்து 10 நிமிடம் நீடித்த இந்த அதிசய நிகழ்வின்போது சிவலிங்கத்துக்கு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சேனாதிபதி குருக்கள், கோவில் கணக்கர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று முன்தினம் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News