ஆன்மிகம்
கொடியேற்ற நிகழ்ச்சி நடந்ததையும், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

பழனி லட்சுமி நாராயணபெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2021-04-19 05:57 GMT   |   Update On 2021-04-19 05:57 GMT
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.
பழனி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் 6 கலசங்கள் வைக்கப்பட்டு, கலச பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்படம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. கொடியேற்றத்தை காண லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சன்னதி வீதியில் எழுந்தருளினார். பின்னர் கொடிப்படம் உள்பிரகாரம் சுற்றி கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து காலை 7.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை கோவில் குருக்கள்கள் கார்த்திகேயன், பாலாஜி மற்றும் குருக்கள்கள் செய்திருந்தனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல் 26-ந்தேதி நடைபெற இருந்த தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News