ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணிகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு

Published On 2020-11-26 07:02 GMT   |   Update On 2020-11-26 07:02 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக 7-ம் நாள் விழாவின்போது மாடவீதியில் தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 7-நாளான இன்று (வியாழக்கிழமை) தேரோட்டத்திற்கு பதிலாக பஞ்ச மூர்த்திகள் உலா கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.

மேலும் வருகிற 29-ம் தேதி அதிகாலையில் கோவிலில் சாமி சன்னதி முன்பு பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணி மேற்கொண்டனர். மேலும் கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து கோவில் அலுவலர்கள் உடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
Tags:    

Similar News