ஆன்மிகம்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா

Published On 2020-02-29 11:23 IST   |   Update On 2020-02-29 11:23:00 IST
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகருக்கு உற்சவம் நடைபெறும். அந்த வகையில் கடந்த 17-ந்தேதி ஆழத்து விநாயகருக்கு கொடியேற்றப்பட்டு, 26-ந்தேதி வரை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி தினசரி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. மேலும் வருகிற 4-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக நிகழ்ச்சியும், 7-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

Similar News