ஆன்மிகம்
திருப்பரங்குன்றத்தில் மாசி பாரி வேட்டை திருவிழா

திருப்பரங்குன்றத்தில் மாசி பாரி வேட்டை திருவிழா

Published On 2020-02-24 04:25 GMT   |   Update On 2020-02-24 04:25 GMT
திருப்பரங்குன்றத்தில் மாசி பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் கீழ ரத வீதியில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி சமேத குருநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி சிவராத்திரி திருவிழா 5 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க அங்காள பரமேஸ்வரி புறப்பட்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவையொட்டி அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சர்வ அலங்காரம், தீபாராதனை நடந்தது. அங்கு பக்தர்கள் குவிந்து இருந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று பாரிவேட்டை நடைபெற்றது. இதனையொட்டி கிரிவலப்பாதையில் உள்ள காட்டு பேச்சியம்மன்கோவிலுக்கு பூப்பல்லக்கில் அங்காள பரமேஸ்வரி புறப்பட்டுச் சென்றார். 50-க்கும் மேற்பட்டோர் கள் தங்களது வெண்கல மணியடித்தபடி வந்தனர். இதனால் கிரிவலப்பாதை முழுவதும் மணி ஓசை ஒலித்தது. இதையடுத்து காட்டு பேச்சியம்மன் கோவிலில் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.
Tags:    

Similar News