ஆன்மிகம்
உறையூர் நாச்சியார் கோவிலில் முதல் கால யாகபூஜைகள் தொடக்கம்

உறையூர் நாச்சியார் கோவிலில் முதல் கால யாகபூஜைகள் தொடக்கம்

Published On 2019-08-29 08:40 IST   |   Update On 2019-08-29 08:40:00 IST
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று மாலை முதல் கால யாகபூஜைகள் தொடங்கியது. மகாசங்கல்பம், அனுக்ஞை வாஸ்து பூஜை, அங்குரார்ப் பணம் போன்றவற்றை பட்டர்கள் நடத்தினார்கள். இன்று(வியாழக்கிழமை) காலை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு யாக குண்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Similar News