ஆன்மிகம்

நற்பலன்களை தரும் கணபதி ஹோமம்

Published On 2019-01-22 10:01 GMT   |   Update On 2019-01-22 10:01 GMT
எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.
விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது. பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான்தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது. சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும் கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட கணபதி ஹோமம் செய்யலாம்.

கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி' என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும். புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.
Tags:    

Similar News