ஆன்மிகம்
தாமிரபரணி ஆற்றுக்கு சிவாச்சாரியார்கள் தீப ஆரத்தி காண்பித்தபோது எடுத்த படம்.

நெல்லையில் மகா புஷ்கர நிறைவு விழா: தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி

Published On 2018-10-24 03:18 GMT   |   Update On 2018-10-24 03:18 GMT
நெல்லையில் நடைபெற்ற மகா புஷ்கர நிறைவு விழாவில் தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சிறப்பு வாய்ந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி நெல்லை கைலாசபுரம் தைப்பூச மண்டபத்தில் மகா புஷ்கர நிறைவு விழா நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் 7 சிவாச்சாரியார்கள் நின்று வேத மந்திரங்கள் முழங்க தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி காண்பித்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றில் மலர்களை தூவி விழா நிறைவு செய்யப்பட்டது. அப்போது தாமிரபரணி அன்னையை போற்றி எழுதப்பட்ட பாடல், இசையுடன் பாடப்பட்டது. மேலும் பக்தர்கள் மீது தாமிரபரணி புனிதநீரும் தெளிக்கப்பட்டது. 
Tags:    

Similar News