ஆன்மிகம்

பழமைவாய்ந்த பெரிய தெப்பக்குளம்

Published On 2018-07-13 08:14 GMT   |   Update On 2018-07-13 08:14 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள பழமைவாய்ந்த ரங்கநாதா ஆலயத்தின் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ளது சந்தேபென்னூர் என்ற திருத்தலம். இங்கு மிகவும் பழமைவாய்ந்த ரங்கநாதா ஆலயம் அமைந்துள்ளது. இதன் முன்பகுதியில் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. கர்நாடக மாநிலத்திலேயே மிகப்பெரிய தெப்பக்குளம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

இந்த தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் 50 அடி உயரம் கொண்ட பெரிய கோபுரம் உள்ளது. அது ‘வசந்த மண்டபம்' என்று அழைக்கப்படுகிறது. காண்பவர்களை கவரும் வகையில் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் இந்த தெப்பக்குளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதன் 8 திசைகளிலும் சிறிய கோபுரங்கள் உள்ளன. அவற்றில் 6 கோபுரங்கள் மட்டுமே, தற்போது பழமை மாறாமல் காட்சி தருகின்றன. கல், செங்கல், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டுள்ள இந்த தெப்பக் குளத்தை, ஹனுமந்தப்பா நாயகா கட்டியதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News