ஆன்மிகம்

திருவேற்காடு கருமாரியின் புற்று

Published On 2018-07-03 09:55 IST   |   Update On 2018-07-03 09:55:00 IST
திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் உயர்ந்த ராஜகோபுரத்துடனும், பெரும் மதில் சுவர்களுடனும், விசாலமான பிரகாரத்துடனும் அமைந்துள்ளது.
திருவேற்காட்டில் கருமாரியம்மனின் ஆலயம் உயர்ந்த ராஜகோபுரத்துடனும், பெரும் மதில் சுவர்களுடனும், விசாலமான பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. ஆலயத்தின் நடுவில், அன்னை கருமாரி அமர்ந்து அருள்பாலித்து வருகின்றாள்.

கருமாரி அம்மன் புற்றில் இருந்து தோன்றியவள் இதனால் உடல் முழுமையையும் மறைத்தவளாய், தன் முகத்தினை மட்டும் காட்டிய நிலை கொண்டவளாய் இருக்கிறாள். நான்கு திருக்கரங்கள் கொண்டவள். காலினை மடித்து மற்றொரு காலினை தாழ்த்திய நிலையோடு அமர்ந்தவளாய் காட்சி தருகிறாள் அன்னையின் இந்த அழகான தோற்றத்தைக் காண்போர் முற்பிறவிப் பாவங்கள் அனைத்தும் களையப்பெற்று புண்ணியங்கள் பல பெற்றிடுவர்.

கருணையே வடிவாய் இருக்கும் கருமாரித் தாயினை அவள் சன்னதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் பெறலாம். அது மட்டுமின்றி நாம் விரும்பிய வண்ணமே அருளும் அன்னையவள் நம் கருமாரி ஆவாள்.

இத்தலத்து அன்னையை திருமணம் ஆகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமைந்து வருவது அன்னையின் அருள் சக்திக்கு சான்றாய் விளங்கி வருவதை கண்கூடாய் காணலாம்.

Tags:    

Similar News