ஆன்மிகம்

சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2017-07-26 08:53 GMT   |   Update On 2017-07-26 08:53 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 12 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை நேரங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

இத்தகைய சிறப்பு மிக்க ஆடித்தபசு திருவிழா கொடி ஏற்றம் நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் நடக்கிறது. கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் அடுத்த மாதம் 4-ந் தேதியும், சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா 6-ந் தேதியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் செல்லத்துரை மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News