ஆன்மிகம்

வைகாசி அமாவாசையையொட்டி மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2017-05-25 10:12 GMT   |   Update On 2017-05-25 10:12 GMT
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற வைகாசி அமாவாசை சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வேண்டுதல் ஸ்தலமாக ஆனைமலை மாசாணியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆனைமலை உப்பாற்றங்கரையில் சயன நிலையிலிருந்து அருள்பாலித்து வருகிறார் மாசாணியம்மன்.

ஒவ்வொரு அமாவாசையன்று ம்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அமாவாசை சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை முதல் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் அம்மனை எளிதில் தரிசனம் செய்யும் வகையில் கோவில் நடை விடிய, விடிய திறந்து வைத்திருக்க கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதிகாலையில் நடைபெற்ற முதல் கால பூஜையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.அதனை யடுத்து நடைபெற்ற உச்சிபூஜை சாயரட்ஷை மற்றும் தங்க மலர் அர்ச்சனை பூஜையிலும் ஏராளமான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, திருப்பூர். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலி ருந்து வந்தபக்தர்களின் வசதிக்காக 50 க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடிய, விடிய இயக்கப்பட்டன. வால்பாறை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடு பட்டனர். உதவி ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோக நாதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News