ஆன்மிகம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2017-05-08 04:58 GMT   |   Update On 2017-05-08 04:58 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், வாகன வீதி உலாவும் நடந்தது. விழாவின் சிகர நிழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.



அதிகாலை 5.30 மணிக்கு கோ ரதம், விநாயகர் தேரோட்டம், 9.45 மணிக்கு மேல் சுவாமி தேரோட்டமும், அதை தொடர்ந்து அம்பாள் தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

தேரோட்டத்தில் கோவில் துணை ஆணையர் பொன் சுவாமிநாதன், சங்கரன்கோவில் நகரசபை ஆணையாளர் ராஜேந்திரன் உள்பட சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News