ஆன்மிகம்

பெண்ணாடம் பிரளயகாளேஸ்வரர் கோவிலில் அப்பர் திருவிழா

Published On 2017-05-05 07:50 GMT   |   Update On 2017-05-05 07:50 GMT
பெண்ணாடம் பிரளய காளேஸ்வரர் கோவிலில் அப்பர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெண்ணாடத்தில் பிரசித்தி பெற்ற பிரளயகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் 5-வது நாள் அப்பர் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா பிரளயகாளேஸ்வரர் கோவிலில் கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினசரி கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

5-வது நாளான நேற்று கோவிலில் அப்பர் சுவாமி திருவிழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு திரவியபொடி, பால், தயிர், இளநீர், மூவகை பழங்கள், சந்தனம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை கொண்டு அப்பருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கைலாய வாத்தியம் முழங்க அப்பர் தேர் வீதிஉலா மாடவீதிகள் வழியாக வந்து தேரடியில் நிறைவடைந்தது.

இதில் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 8-ந் தேதி (திங்கட் கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News