ஆன்மிகம்

கோவில்பட்டி சொர்ணமலை முருகன் கோவில் வருஷாபிஷேகம்

Published On 2017-03-17 08:30 GMT   |   Update On 2017-03-17 08:30 GMT
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்து சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

கோவில்பட்டி, மார்ச். 17-

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலுடன் இணைந்து சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், சிறப்பு ஹோம பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வலம் வந்து மூலவர் கதிர்வேல் முருகர், விநாயகர் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி விமானங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கதிர்வேல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மண்டகப்படிதாரர் பி.எம்.வி. காளிராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News