ஆன்மிகம்

தாமிரபரணி தாய் சன்னிதி

Published On 2017-02-01 09:32 GMT   |   Update On 2017-02-01 09:33 GMT
தாமிரபரணி நதியின் சிறப்பை திருநெல்வேலி அறியும். சிறப்புமிக்க தாமிரபரணிக்கு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தனியாக சிலை ஒன்று இருக்கிறது.
தாமிரபரணி நதியின் சிறப்பை திருநெல்வேலி அறியும். சிறப்புமிக்க தாமிரபரணிக்கு, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தனியாக சிலை ஒன்று இருக்கிறது. ஆலயத்தில் நாயன்மார் சன்னிதிக்கு அருகில் இந்த தாமிரபரணி தாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமி, தைப்பூசம், ஆவணி மூலம் ஆகிய விசேஷ நாட்களில், இந்த அன்னையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தாமிரபரணி ஆற்றில் நீராடச் செய்வார்கள்.

தாமிர பரணியில் நீராடினால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான். தன்னுடைய நதியிலேயே தாமிரபரணி தாய் நீராடும் வைபவம் நடத்தப்படுவதாக காரண காரியம் கூறப்படுகிறது. தாமிரபரணி தாய் சன்னிதிக்கு முன்பாக கங்கை, யமுனை ஆகியோர் துவாரபாலகிகளாக வீற்றிருக்கின்றனர்.

Similar News