ஆன்மிகம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

Published On 2017-01-22 09:08 GMT   |   Update On 2017-01-22 09:08 GMT
உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
உலக புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை அனுமதியுடன் காஞ்சி அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், சம்கிதா ஹோமம், அஷ்த்திர ஹோமம் மற்றும் கடந்த 5ம் தேதியன்று பாலாலயமும் நடைபெற்றது. 400 வருடங்களுக்கு பின்னர் 19ம்தேதி கொடிமரம் அமைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தற்போது கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக கலசத்திற்கு செல்லும் படிக்கட்டு அமைக்கும் பணியின் தரம், கோவிலை சுற்றி பாதுகாப்பு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய நிற்கும் இடம், சிற்பங்களின் பாதுகாப்பு, இதற்காக நடைபெற்று வரும் பணிகளை சென்னை மண்டல தொல்லியல்துறை கண்காணிப்பாளர் லெட்சுமி ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அவருடன் தொல்லியல்துறை உதவி பொறியாளர் சரவணன், தஞ்சை மண்டல தொல்லியல்துறை பாதுகாப்பாளர் சந்திரசேகர், உதவி ரசாயன அலுவலர் பிரசோப்ராஜ், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் சுந்தரமூர்த்தி, இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாக செயல் அலுவலர் ரமேஷ், கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டு குழும தலைவர் பொறியாளர் கோமகன், பொருளாளர் மகாதேவன், காங்சி சங்கரமட கமிட்டியினர் ஜடாதரன், ரவி‌ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News