ஆன்மிகம்

பழமையான இடுக்குப் பிள்ளையார் கோவில்

Published On 2016-12-08 13:05 IST   |   Update On 2016-12-08 13:05:00 IST
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழமையான இடுக்குப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இடுப்பி பிள்ளையாரை பற்றி விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பழமையான இடுக்குப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில், நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாசல்கள் உள்ளன. பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து, தவழ்ந்து, 2-வது வாசலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும்.

இவ்வாறு வந்து இடுக்குப்பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், இக்கோவிலில் நுழைந்து வருவதால் தலைவலி, பில்லி சூனியம், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்பதும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. கிரிவலம் வருவோருக்கு வலி குறையும் என்பது ஐதீகம்.

Similar News