ஆன்மிகம்
ஆண்டாள்

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 14

Published On 2020-12-29 01:30 GMT   |   Update On 2020-12-26 09:22 GMT
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
பொருள் :
 
"உங்களையெல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்ன பெண், அதை மறந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள். அவளை எழுப்பும் பாடல்.
 
இ‌னிமையாகப் பேசக்கூடிய நாக்கைக் கொண்டவளே! "உங்களை எல்லாம் நானே எழுப்புவேன்" என்று சொன்னாய். ஆனால், அதைச் செயலில் காட்ட மறந்துவிட்டாய். அத்துடன் அதைப்பற்றி வெட்கப்படவும் இல்லை. பெண்ணே! எழுந்திரு.
 
இதோ பார். உங்கள் புறங்கடையில் செங்கழு நீர்ப்பூக்கள் மலர்ந்துவிட்டன. (காலைப் பொழுதில் குவிந்து கொள்ளும்) ஆம்பல் பூக்கள் குவிந்து (மூடிக்) கொண்டுவிட்டன. காவி உடை அணிந்தவர்களும், தூய்மையான பற்களை உடையவர்களுமான துறவிகள் அவர்களது திருக்கோவிலில், சங்கை முழக்குவதற்காகப் போகின்றார்கள்.
 
சங்கு, சக்கரம் முதலியவைகளைக் கொண்ட பரந்த திருக்கரங்களை உடையவனும், தாமரை போன்ற திருக்கண்களை உடையவனுமான கண்ணனைப் பாடு.
Tags:    

Similar News