திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் தினமும் இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும்.
திருமணம் நடைபெற வேண்டியும், மன சஞ்சலம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பவும் இந்த பாடல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
அறமிலா அதி பாதக வஞ்சத் தொழிலாலே
அடியனேன் மெலிவாகிமனம்சற் றிளையாதே
திறல்குலாவிய சேவடி வந்தித் தருள்கூடத்
தினமுமேமிக வாழ்வுறும் இன்பைத் தருவாயே
விறல்நிசாசரர் சேனைகள் அஞ்சப் பொரும்வேலா
விமல மாதபி ராமிதருஞ்செய்ப் புதல்வோனே
மறவர் வாணுதல் வேடைகொளும்பொற் புயவீரா
மயிலை மாநகர் மேவிய கந்தப் பெருமாளே!
ஏறுமயில் ஏறிவிளை யாடும் முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடி யார்கள்வினை தீர்க்குமுகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருளல் வேண்டும்
ஆதிஅரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
இல்லத்தில் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் இந்தப் பாடலை பாடிவர வேண்டுதல் பலிக்கும். தடையின்றி திருமண வைபவம் நடந்தேறும்.