ஆன்மிகம்

ஆபத்து ஏற்படாமல் தடுக்கும் சிவதூதி

Published On 2018-07-27 07:25 GMT   |   Update On 2018-07-27 07:25 GMT
புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர். இந்த சிவதூதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த ஆபத்தும் நெருங்காது.
இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப-நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்கும் முன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு ‘சிவதூதி’ என்று பெயர்.

எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூரிய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்தினங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன. தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள்.

மந்திரம்:

ஓம் சிவதூத்யை வித்மஹே
சிவங்கர்யை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்:

சுக்ல பட்ச சப்தமி, கிருஷ்ண பட்ச நவமி.

பலன்கள்: நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். எந்த ஆபத்தும் நெருங்காது.
Tags:    

Similar News