ஆன்மிகம்

குடும்ப ஒற்றுமைக்கு நித்யக்லின்னா காயத்ரி மந்திரம்

Published On 2018-07-19 04:55 GMT   |   Update On 2018-07-19 04:55 GMT
குடும்ப ஒற்றுமை, வீண் தகராறுகள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது நித்யக்லின்னா காயத்ரி மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், ‘நித்யக்லின்னா மதோவஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள். இந்த தேவிக்கு ‘மதாலஸா’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

மந்திரம்:

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே
நித்ய மதத்ரவாய தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்

வழிபட வேண்டிய திதிகள்: சுக்லபட்ச த்ருதியை, கிருஷ்ண பட்ச திரயோதசி.

பலன்கள்: குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராது.
Tags:    

Similar News