ஆன்மிகம்

மாங்கல்ய பலம் தரும் ஸ்லோகம்

Published On 2018-06-05 05:40 GMT   |   Update On 2018-06-05 05:40 GMT
இந்த மந்திரத்தை எந்த பெண் நம்பிக்கையுடன் உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு வாழ்வாள்.
ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் காதலித்த சத்யவானுடன் தான் வாழ வேண்டுமென உறுதியாய் இருந்தாள் சாவித்திரி. ‘பதியே தெய்வம்’ என எண்ணும் உயர்ந்த பண்பாலும், பவித்திரமான மாங்கல்ய பலத்தாலும் தன் கணவனின் ஆயுளை நீடிக்கச் செய்யலாம் என்று உறுதியாக நம்பினாள் சாவித்திரி.

சர்வ சக்தி வாய்ந்த முனிவர் அத்ரி மகரிஷி அவருடைய மனைவி அனுசூயா தேவி. தன் கணவனின் நலனுக்காக அனுசூயா தேவியை வேண்டினாள் சாவித்திரி. பெண்களுக்கெல்லாம் என்றும் மங்களத்தைத் தரக்கூடிய மாங்கல்ய மந்திரத்தைச் சாவித்திரிக்கு உபதேசித்தாள் அனுசூயா.

“மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா”

என்பதே அந்த மந்திரமாகும்.

மனம் சுத்தியுடன் இந்த மந்திரத்தை ஜெபித்தால், சத்தியவான் நீண்ட ஆயுளைப் பெறுவான் என்ற நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தாள் சாவித்திரி.

எந்தப் பெண், அன்னையாம் தேவியிடம் நம்பிக்கை கொண்டவளாக இந்த மந்திரத்தை உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு வாழ்வாள்.

காரடையான் நோம்பினை மேற்கொண்டு சரடு மாற்றும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபிக்க வேண்டும். அன்னையின் பூரண நல்லாசி கிடைக்கும்.
Tags:    

Similar News