ஆன்மிகம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

Published On 2018-05-26 06:32 GMT   |   Update On 2018-05-26 06:32 GMT
இந்த ஸ்லோத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர்.
மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

ஸ்ரீதேவி துதி

பொதுப் பொருள்:


மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
Tags:    

Similar News