ஆன்மிகம்

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் துதி

Published On 2018-01-30 09:24 GMT   |   Update On 2018-01-30 09:24 GMT
சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளையும் பெறலாம்.
திருவடியைத் தேடிவந்தோம் ஐயப்பா- உன் 
திருப்புகழைப் பாடிவந்தோம் ஐயப்பா 
இருமுடியைத் தாங்கிவந்தோம் ஐயப்பா - உன் 
இன்னருளை நாடிவந்தோம் ஐயப்பா 
காடுமலை கடந்துவந்தோம் ஐயப்பா - உன் 
காந்தமலை காணவந்தோம் ஐயப்பா 
கேடுஒன்றும் வந்திடாமல் ஐயப்பா - எனக்குக் 
கேட்டவரம் தந்திடுவாய் ஐயப்பா 
பம்பைநதி ஆடிவந்தோம் ஐயப்பா - எம்மைப் 
பார்த்தருள வேண்டுகிறோம் ஐயப்பா 
உன்னைநம்பி வாழுகிறோம் ஐயப்பா - எனக்கு 
நல்வழி காட்டிடுவாய் ஐயப்பா 
முற்பிறப்பில் செய்ததவம் ஐயப்பா - உன் 
முகம்காண கொடுத்துவைத்தோம் ஐயப்பா 
அன்னையைப்போல் நீயிருந்து ஐயப்பா - எம்மை 
அன்புடனே ஆண்டருள்வாய் ஐயப்பா 
 என்னதவம் செய்தேனோ ஐயப்பா 
பேரின்பத்தை நான் அடைந்தேன் ஐயப்பா 
முன்னாள் செய்த புண்ணியத்தால் ஐயப்பா 
இந்நாள் சரணம் பாடுகிறேன் ஐயப்பா 
ஐயனைக் காண விரதம் இருந்து ஐயப்பா 
கழுத்தில் துளசி மாலையணிந்தேன் ஐயப்பா 
காலை, மாலை சரணம்பாடி ஐயப்பா 
காவியுடை நான் அணிவேன் ஐயப்பா 
எல்லோரையும் சாமி என்றே ஐயப்பா
நல்லபடி நான் அழைப்பேன் ஐயப்பா 
மார்கழிப் பதினொன்றில் ஐயப்பா 
மண்டலபூஜை செய்திடுவேன் ஐயப்பா 
உன்னைக்காண நல்லநாளில் ஐயப்பா - உன் 
இருமுடியைத் தாங்கிடுவேன் ஐயப்பா 
சரணம்பாடி வழிநடப்பேன் ஐயப்பா 
ஐயன்மலை வந்தடைவேன் ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா ஐயப்ப சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே ..... சரணம் ஐயப்பா  ..... 
Tags:    

Similar News