ஆன்மிகம்

சர்ப்பதோஷம் நீங்க தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

Published On 2017-01-23 05:21 GMT   |   Update On 2017-01-23 05:21 GMT
சர்ப்பதோஷம், புத்திர பாக்கியம் கிட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
சென்னை பம்மலை அடுத்துள்ள பொழிச்சலூரில் அமைந்து இருக்கும் சனீஸ்வர பரிகார ஸ்தலமான ”வடதிருநள்ளாறு” என அழைக்கபடும் ”அகத்தீஸ்வரர்” ஆலயம் உள்ளது.

இந்த கோவிலில் இருக்கும் அரச மரத்திற்கு உள்ள தனி சிறப்பு என்னவென்றால், வேம்புவும் அரசுவும் ஒன்றுடன் ஒன்று பின்னி, பிணைந்து இருப்பது சிறப்பு. காரணம் சிலருக்கு சர்ப்ப தோஷத்தினால் குழந்தை பாக்கியம் இல்லாமல் போகலாம் என சில ஜோதிட விதிகள் சொல்லப்படுவதுண்டு. அந்த தோஷம் விலகி குழந்தை பாக்கியம் கிடைக்க, அரசமரமும், வேப்பமரமும் இணைந்த இடத்தில் உள்ள விநாயகரின் முன் ....,

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரத்னமௌளிர் நிரங்குஸ:|

ஸர்ப்பஹார கடீசூத்ர : சர்ப்ப யக்ஞோபவீதவாந் ||
ஸர்ப்பகோடீர கடக: சர்ப்ப க்ரைவேய காங்கத:|
ஸர்ப்ப கக்ஷோதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:||
சர்வ வஸ்யகரோ கர்ப்பதோஷஹா புத்ரபௌத்ரத :||

இந்த ஸ்லோகத்தைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர சர்ப்பதோஷம் நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். மேலும், நிறைவான பலன்களும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

Similar News