ஆன்மிகம்

ரெங்கநாத ஸ்தோத்திர ஸ்லோகம்

Published On 2017-01-07 07:46 GMT   |   Update On 2017-01-07 07:46 GMT
ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை நாளை வைகுண்ட ஏகாதசி அன்று சொல்லி பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் அனைத்து இன்பங்களும் வாசல் தேடி வரும்.
ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!

பொருள்:

காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே! ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே! ரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.

Similar News