ஆன்மிகம்

ஐயப்ப சாமிகள் பாட வேண்டிய பாடல்

Published On 2016-12-07 07:54 GMT   |   Update On 2016-12-07 07:54 GMT
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பக்தியுடன் தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டிய பாடலை கீழே பார்க்கலாம்.
மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

Similar News