ஆன்மிகம்

நவராத்திரி 7-ம் நாளுக்குரிய போற்றி

Published On 2016-10-08 09:40 IST   |   Update On 2016-10-08 09:40:00 IST
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 7-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
ஏழாம் நாள் போற்றி

ஓம் மெய்த் தவமே போற்றி
ஓம் மூலாதாரத்து ஒளியே போற்றி
ஓம் ஆதிமுதல் அம்பரமே போற்றி
ஓம் அகண்ட பரிபூரணியே போற்றி
ஓம் அகிலலோக நாயகி போற்றி
ஓம் நல்வினை நிகழ்த்துவாய் போற்றி
ஓம் அஞ்சலென்று அருள்வாய் போற்றி
ஓம் ஆறுமுகன் வேல் தந்தோய் போற்றி
ஓம் சொல்லுக்கு இனிய சுந்தரி போற்றி
ஓம் வில்லோன் மாயை தந்தவளே போற்றி
ஓம் ஐந்தெழுத்தோன் ஆரணங்கே போற்றி
ஓம் எழுவரில் ஒன்றானவளே போற்றி
ஓம் இல்லத்தொளி தரும் இறைவி போற்றி
ஓம் ஏற்றம் தரும் ஏறே போற்றி
ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி
ஓம் சாம்பவி மாதே போற்றி

Similar News