ஆன்மிகம்

நவராத்திரி 6-ம் நாளுக்குரிய போற்றி

Published On 2016-10-07 10:02 IST   |   Update On 2016-10-07 10:03:00 IST
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 6-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
ஆறாம் நாள் போற்றி :

ஓம் பொன்னரசியே போற்றி
ஓம் நவமணி நாயகியே போற்றி
ஓம் இன்னமுதாய் இருப்போய் போற்றி
ஓம் சிங்கார நாயகியே போற்றி
ஓம் செம்பொன் மேனியளே போற்றி
ஓம் மங்காத ஒளியவளே போற்றி
ஓம் சித்திகள் தருவாய் போற்றி
ஓம் திக்கெட்டும் பரவினோய் போற்றி
ஓம் சுத்த பரிபூரணியே போற்றி
ஓம் மகாமந்திர உருவே போற்றி
ஓம் மாமறையுள் பொருளே போற்றி
ஓம் ஆநந்த முதலே போற்றி
ஓம் ஐவர்க்கும் தலைவி போற்றி
ஓம் செம்மேனியாய் மிளிர்வாய் போற்றி
ஓம் மாகேஸ்வரியே போற்றி
ஓம் மகா சண்டிகையே போற்றி

Similar News