ஆன்மிகம்

நவராத்திரி 4-ம் நாளுக்குரிய போற்றி

Published On 2016-10-05 08:51 IST   |   Update On 2016-10-05 08:51:00 IST
நவராத்திரி 9 நாட்களும் போற்றி பாடுவது நல்லது. 4-ம் நாளுக்குரிய போற்றியை கீழே பார்க்கலாம்.
நான்காவது நாள் போற்றி
ஓம் கருணை வடிவேபோற்றி
ஓம் கற்பகத் தருவேபோற்றி
ஓம் உள்ளத்திருள் ஒழிப்பாய்போற்றி
ஓம் ஊழ்விணை தீர்ப்பவளேபோற்றி
ஓம் கரும்பின் சுவையேபோற்றி
ஓம் கார்முகில் மழையேபோற்றி
ஓம் வீரத்திருமகளே போற்றி
ஓம் வெற்றிக்கு வித்திடுவாய்போற்றி
ஓம் பகைக்குப் பகையேபோற்றி
ஓம் ஆவேசத் திருவேபோற்றி
ஓம் தீமைக்குத் தீயேபோற்றி
ஓம் நல்லன வளர்ப்பாய்போற்றி
ஓம் நாரணன் தங்கையேபோற்றி
ஓம் அற்புதக் கோலமேபோற்றி
ஓம் ஆற்றலுள் அருளேபோற்றி
ஓம் புகழின் காரணியேபோற்றி
ஓம் காக்கும் கவசமேபோற்றி
ஓம் ரோகிணி தேவியேபோற்றி

Similar News