ஆன்மிகம்

கம்பர் ஆஞ்சநேயருக்கு பாடிய பாடல்

Published On 2016-09-27 05:09 GMT   |   Update On 2016-09-27 05:10 GMT
ராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார்.
ராமாயணம், பாடத் தொடங்கிய கம்பர், கடவுள் வாழ்த்துப் பகுதியில் ஆஞ்சநேயருக்காகவும் ஒரு பாடல் பாடி உள்ளார். அந்தப் பாடலில் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களோடு ஆஞ்சநேயரைத் தொடர்புபடுத்தி உள்ளார். இதோ அந்த பாடல்: 

'அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி 
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில் 
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்' 

இதன் பொருள் : 

ஐம்பூதங்களுள் ஒன்றாகிய காற்றுக்கு மைந்தனாகிய அனுமன், ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நீர்ப்பரப்பாகிய கடலைத்தாண்டி, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய ஆகாயத்தையே வழியாகக் கொண்டு இலங்கையை அடைந்து, ஐம்பூதங்களுள் ஒன்றாகிய நிலமகள் பெற்றெடுத்த சீதையைக் கண்டு, அயலார் ஊரில் ஐம்பூதங்களுள் ஒன்றாகிய தீயை வைத்தான். 

இதன் மூலம் ஆஞ்சநேயர் ஐம்பூதங்களையும் தமக்குள் கட்டுப்படுத்தியவர் என்பது தெளிவாகிறது. எனவே ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களையும் வணங்கியதற்குச் சமமாகும். ஆஞ்சநேயரை வணங்கினால் ஐம்பூதங்களின் சக்தியும் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Similar News